ஊழியர்கள் வயிற்றில் அடிக்கும் ஜீ அரசு..EPFO வட்டி விகிதம் தடாலடி குறைப்பு..!!
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கான EPFO வட்டி விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அதிக அளவில் பயன் தருவதாக இபிஎஃஓ பணம் அமைந்துள்ளது. இதன் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானதால், ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி உள்ள சூழலில், தற்போது வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1977-78-ம் ஆண்டில் EPFO-வுக்கு 8 சதவீதம் வட்டி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் மிக குறைவாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் ஏற்கனவே பொருளாதார பிரச்சினைகளில் சிக்கியுள்ள நடுத்தர வர்க்க மாத சம்பளம் வாங்குவோர், மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.