நியான் வாயு உற்பத்தி நிறுத்தம்.. மின்னணு சாதனங்கள் விலை உயர்வு..!!
உக்ரைனில் நியான் வாயு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மின்னணு சாதனங்களின் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் அனைத்திலும் சிப் என அழைக்கப்படும் செமிகண்டக்டர்களை தயாரிக்க நியான் வாயு முக்கிய இடம்பெறுகிறது.
உக்ரைன் நாட்டில் உள்ள கிரையோயின் மற்றும் இங்கஸ் ஆகிய இரண்டு ஆலைகளிலிருந்து தயாரிக்கப்படும் நியான் தான் உலக அளவில் 50 சதவீதத்தை நிவர்த்தி செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்து வருவதால் இரண்டு ஆலைகளிலும் நியான் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், மின்னணு சாதனங்களில் விலை கடுமையாக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
நம் அன்றாட அவசிய தேவையான செல்ஃபோன், கார் உள்ளிட்ட அனைத்துக்கும் சிப் என்பது முக்கிய பொருளாக இருப்பதால், செல்ஃபோன், கார் தயாரிப்புகள் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.