1 லட்சத்தை கடந்த ஏற்றுமதியாளர்கள்.. அசத்தும் அமேசான் ..!!

அமேசான் வலைதளத்தின் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2022 பிப்ரவரி வரையில் இந்த எண்ணிக்கை 66% உயர்ந்துள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.
பெரிய நகரங்களை சேர்ந்த இந்திய விற்பனையாளர்கள் பலரும் அமேசானின் வலைதளத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறையை சேர்ந்த தொழில்முனைவோர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் தொழில்நுட்பத்துடன் கூடிய அமேசானின் பிராண்டுகளை முன்னெடுப்பவர்களாக உள்ளனர். டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, சூரத். பெங்களுரு ஆகிய பெரிய நகரங்களிலிருந்து அதிகளவில் ஏற்றுமதியாளர்கள் உலகளாவிய விற்பனை திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
2015-ம் ஆண்டில் 100 ஏற்றுமதியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள், ரூ.22,500 கோடி மதிப்பிலான பொருட்களை அமேசான் வலைதளம் வாயிலாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் அளவை ரூ.75,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனஅமேசான் தெரிவித்துள்ளது.