Paytmக்கு சீனாவோட லிங்க்.. ஆப்பு வைக்க காரணம் இதாங்க..!!
Paytm Payment வங்கி சீனாவுக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்ததால்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேடிஎம் வங்கிக்கு தடை:
இணையவழி நிதி பரிவர்த்தனை செய்து வரும் Paytm Payment வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டவிதி 35-ஏ பிரிவின் கீழ் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பேடிஎம் பேமெண்ட் வங்கியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
தகுதியுடைய தகவல் தொழில் நுட்ப தணிக்கை குழுவை அமைத்து Paytm Payment வங்கியின் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை தணிக்கை செய்யும்படியும் ஆர்பிஐ வலியுறுத்தியிருந்தது.
பேடிஎம் வங்கிக்கு தடை ஏன்?:
Paytm Payment வங்கியின் சர்வர்களை இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டு தணிக்கை செய்தது. அந்த தணிக்கையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சர்வரிலிருந்து பல்வேறு தகவல்களை சீனாவுக்கு பகிர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனா நிறுவனங்கள் பலவும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளன. இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாலேயே Payment வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ஆர்பிஐ தடை விதித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் சேகர் சர்மாவும், சீனாவின் அலிபாபா குழுமமும் இணைந்து தொடங்கிய பேடிஎம் பேமெண்ட்ஸ் நிறுவனத்தில் சீன நிறுவனங்கள் பலவும் மறைமுகமாக முதலீடு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.