வானிலை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு – நிதிநிலை அறிக்கையில் தகவல்..!!
வானிலையை துல்லியமாக கணிப்பதற்காக சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வாநிலை மேம்பாட்டு பணிகளுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளுக்காகவும், 2 இடங்களில் களஆய்வுகளை செய்யவும், கொற்கை முன்களப் பணிகள் ஆகியவற்’றுக்கா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு, கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.79 கோடி நிதி உதவி, உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம், தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி நிதியும், கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,314 கோடிநிதியும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடி நிதி ஒதுக்கீடு, புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு அகரமுதலியை உருவாக்கும் சிறப்பு திட்டத்துக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும், வடசென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்றும், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து, கபடி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியை நம் நாட்டிலோ, பிற வெளிநாட்டிலோ தொடர்வதற்கான வழிமுறைகள் ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.