பெண்களுக்கு முக்கியத்துவம் .. Britannia அறிவிப்பு..!!
பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் 2024-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பன்முகத்தன்மை விகிதத்தை அடைவதை தாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரிட்டானியா நிறுவனம் கூறியுள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி (CMO) அமித் தோஷி கூறுகையில், நிறுவனத்தின் பணியாளர்களில் 38 சதவீதம் பேர் பெண்கள். கவுகாத்தி தொழிற்சாலையில், பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது, அது 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார்.
இதுவரை 30 பெண் தொழில்முனைவோருக்கு தலா ரூ.10 லட்சம் விதை மூலதனமாக ஈ-காமர்ஸ், டிஜிட்டல் சேவைகள், மொபைல் வேன்கள் மூலம் கண் மருத்துவம் மற்றும் குழந்தை கல்வி போன்ற துறைகளில் ஸ்டார்ட்-அப் செய்ய நிறுவனம் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக நிறுவனம் கூகுளுடன் இணைந்துள்ளது என்று பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.