வணிக வாகனங்கள் விலை உயர்வு – 1.5% வரை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு..!!
வரும் 1-ம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவன வர்த்தக பயன்பாட்டு வாகனங்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது.
ரத்தன் டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் பல்வேறு பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும், சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து செலவினங்களும் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்பட்டு ஒட்டுமொத்த செலவினங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை சரி செய்வதற்காக வணிக வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி, வரும் 1-ம் தேதி முதல் அனைத்து வர்த்தக பயன்பாட்டு வாகனங்களின் விலையும் 1 முதல் 1.5% வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.