உச்சத்தில் இருந்த எச்டிஎஃப்சி.. எல்ஐசி பங்குகள் – 42% சரிவு..!!
இந்த ஆண்டில் மல்டிபேக்கர் பங்குகளை இன்றைய பங்குச் சந்தை அதிக அளவில் வழங்கியதால், இரண்டாம் நிலைச் சந்தைக்கு 2021-ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்தது.
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
எண்டூரன்ஸ் டெக்னாலஜிஸ் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான இதன் பங்கு விலை, ரூ.1,989 என்ற உச்சநிலையை எட்டிய பிறகு, ரூ.1145 ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அது 15 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்துள்ளது.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனப் பங்கின் விலை அக்டோபர் 2021-ல் அதிகபட்சமாக ரூ.1279 ஆக உயர்ந்த நிலையில், தற்போது இ IRCTC பங்கின் விலை NSE இல் ரூ.768-ஆக உள்ளது. அதாவது பங்கு 40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த PSU பங்குகள் 6 சதவிகிதம் சரிந்துள்ளது.
HDFC AMC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் பங்குகள் செப்டம்பர் 2021-ல் அதிகபட்சமான ரூ.3,365 விலையை எட்டியது. இப்போது அதன் ஒரு பங்கின் விலை ரூ.2158 ஆக உள்ளது. அதாவது பங்கு சுமார் 36 சதவீதம் சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு நவம்பவர் மாதத்தில் ஹெச்டிஎஃப்சி ஏஎம்சி பங்குகள் அதிகபட்சமாக ரூ.3707.80 ஆக இருந்தது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை ஆகஸ்ட் 2021-ல் 151 ரூபாய்வரை உயர்ந்தது. இன்று SAIL பங்கின் விலை ₹99.70 ஆகும். இது அதன் சமீபத்திய அதிகபட்சத்தை விட சுமார் 35 சதவீதம் குறைவு. SAIL பங்குகள் இதுவரை சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளது.
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்: இந்தப் பங்கு ஜூன் 2021 இல் அதிகபட்சமாக ரூ.542.45 ஆக இருந்தது. இன்று எல்ஐசி ஹவுசிங் பங்கின் விலை ரூ.369 ஆக உள்ளது. அதாவது பங்கு அதன் சமீபத்திய உயர்விலிருந்து சுமார் 32 சதவீதம் குறைந்துள்ளது.