இப்ப வாங்கிக்கோங்க.. அப்பறம் தாங்க.. Flipkart-ன்அசத்தல் Offer ..!!
கிரெடிட்வித்யா ஒருங்கிணைப்புடன் ஃப்ளிப் கார்ட் நிறுவனம் ‘இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்‘ என்னும் கோஷத்துடன் வணிகர்களுக்கு கடன் தீர்வை வழங்க கைகோர்த்துள்ளன.
ஃப்ளிப் கார்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிரெடிட்வித்யா, ஃப்ளிப் கார்ட் குழுமத்தின் டிஜிட்டல் B2B சந்தை, 1.5 லட்சம் வணிகர்களின் கடன் தேவைகளை நிவர்த்தி செய்ய பல நிதி நிறுவனங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் மூலதனத்தை அணுகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளிப் கார்ட் மொத்த விற்பனையில் உள்ள வணிகங்கள் முழுவதுமாக டிஜிட்டல் மற்றும் உடனடி கிரெடிட்டைத் தேர்வு செய்யலாம்.
ஃபிளிப்கார்ட் மொத்த விற்பனையின் மூத்த துணைத் தலைவரான ஆதர்ஷ் மேனன் கூறுகையில், ‘இப்போதே வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் கிரெடிட்வித்யா போன்ற நிறுவனங்கள், வணிகர்களின் கையில் அதிகஅளவில் பணம் இல்லாவிட்டாலும், அவர்களின் சரக்குகளை கொள்முதல் செய்ய அவர்களுக்கு உதவுகிறது” என்று தெரிவித்தார்.