Sonyயுடன் இணையும் Zee.. – Invesco Developing Markets பச்சைக்கொடி..!!
சோனியுடனான Zee இணைப்பை Invesco Developing Markets ஆதரித்துள்ளது.
Zee Entertainment நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை Invesco Developing Markets வைத்துள்ளது. இந்நிலையில், இன்வெஸ்கோ டெவலப்பிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், சோனியுடனான Zee இணைப்பை ஆதரித்துள்ளது.
அத்துடன் Zee-க்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.
முன்மொழியப்பட்ட இணைப்பின் முன்னேற்றத்தை இன்வெஸ்கோ தொடர்ந்து கண்காணிக்கும். தற்போது முன்மொழியப்பட்டுள்ளபடி இணைப்பு முடிக்கப்படவில்லை எனில், புதிய EGM-ஐக் கோருவதற்கான உரிமையை Invesco Developing Markets பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், Zee Entertainment நிர்வாகம் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.