நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!
அனில் அம்பானி, Reliance Infrastructure மற்றும் Reliance Power நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார்.
அனில் அம்பானியின் Reliance Power:
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
SEBI தடை:
இந்த நிலையில், அனில் அம்பானியின் Reliance Home Finance நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூரிட்டிஸ் சந்தைகளில் பங்கேற்க செபி தடை விதித்துள்ளது. மேலும், அனில் அம்பானி, அமித் பாப்னா மற்றும் ரவீந்திர சுதாகர் மற்றும் பிங்கேஷ் ஆர்.ஷா ஆகிய 4 பேருக்கும் பங்குச் சந்தையில் பங்கேற்க செபி கடந்த மாதம் தடை விதித்திருந்தது.
SEBI அறிக்கை:
அனில் அம்பானியின் நிறுவனம் விதிமுறைகளின்படி மொத்த அனுமதியளிக்கப்பட்ட அளவை விட வரம்பை மீறி நடந்து கொண்டது தெரிய வந்துள்ளதாக செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Reliance Home Finance நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுத்ததாக புகார் எழுந்துள்ளதால் தடை விதிக்கப்படுவதாகவும், நிறுவனத்தின் மேலாளர்கள் உள்ளிட்டோரின் கூட்டு முறைகேடுகள் உள்ளிட்டவை காரணமாகவும் இந்த தடை விதிக்கப்படுவதாக செபி விளக்கம் அளித்திருந்தது.
சொந்த நிறுவனத்திலிருந்து விலகல்:
இதையடுத்து, Reliance Infrastructure மற்றும் Reliance Power நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து அனில் அம்பானி விலகி விட்டதாகவும், செபியின் உத்தரவுப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எவ்வித நிர்வாக பதவியிலும் அனில் அம்பானி இல்லை என்றும் Reliance Infrastructure மற்றும் Reliance Power நிறுவனங்கள் செபியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
கூடுதல் இயக்குநர் ராகுல் சாரின்:
இந்நிலையில், 35 ஆண்டுகளாக மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்திலும், அண்மையில் அந்தோனியா பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் பதவி வகித்து வந்த ராகுல் சாரின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டக்சர், மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனங்களின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.