FedExன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. – இந்திய அமெரிக்கர் பொறுப்பு ஏற்பு..!!
அமெரிக்க பன்னாட்டு கூரியர் டெலிவரி நிறுவனமான FedEx-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் பதவியேற்க இருக்கிறார்.
FedEx-ன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து அதன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஃப்ரடெரிக் டபிள்யூ ஸ்மித் பதவி விலக உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளார்.
FedEx Corp. இன் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் பணியாற்றுவதற்கு முன்பு, சுப்பிரமணியம் FedEx Express இன் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். அவர் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக துணைத் தலைவராகவும், தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
1991-ல் FedEx இல் சேர்ந்ததிலிருந்து ஆசியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பல மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் பணியாற்றினார்.
டென்னசியை தலைமையிடமாகக் கொண்ட FedEx உலகளவில் 600,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.