IDRCL பங்குகளை வாங்கும் HDFC.. – ரூ.300 கோடி முதலீடு..!!
HDFC வங்கி கடன் மேலாண்மை நிறுவனமான IDRCL-ன் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் HDFC வங்கி, நிதி தொடர்பான பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC கடன் மேலாண்மை நிறுவனமான IDRCL-ன் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட India Debt Resolution Company Limited(IDRCL) கடன் மேலாண்மை நிறுவனமாகவும், அனைத்து வகையான கடன் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காகவும் தொடங்கப்பட்டது.
சொத்து புனரமைப்பு நிறுவனமாகவும் செயல்படும் ஐடிஆர்சிஎல். கடன் வழங்குதல் மற்றும் அது தொடர்பான தீர்வுகள், ஆலோசனைகளையும் அளித்து வருகிறது.
இந்நிலையில், ஐடிஆர்சிஎல்-லின் பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் எச்டிஎஃப்சி வங்கி, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதற்காக முதல் தவணையாக ரூ.3 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், IDRCL-ன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் HDFC வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.