வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி – பங்குகளை திரும்ப பெற்ற கெயில்..!!
கெயில் இந்தியா நிறுவனம் ஆயிரத்து 83 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெறப் போவதாக அறிவித்துள்ளது.
மாநில எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனம், அரசாங்கத்தில் 51.80% பங்குகளை வைத்துள்ளது.
இந்த நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் வருவாய் சிறப்பான வகையில் அதிகரித்து, லாபத்துடன் உயர்ந்துள்ளதால் வலுவான நிதி நிலையுடன் உள்ளது.
எனவே அதனை பயன்படுத்தி கொள்வதற்காகவும், வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி தரும் விதமாகவும் பங்குகளை திரும்ப பெறுவதற்கு கெயில் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.190 விலையில் 5 புள்ளி 70 கோடி பங்குகளை ரூ.1.083 கோடியில் திரும்ப வாங்குவதற்கு இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக கெயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.