Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?
Citi வங்கியின் இந்திய முக்கியப் பிரிவுகளை Axis வங்கி கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு பன்னாட்டு வங்கியான சிட்டி வங்கி, 1902-ம் ஆண்டு இந்தியாவுக்குள் வந்தது. 1985-ம் ஆண்டு சிட்டி வங்கியின், இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச அளவில் 13 நாடுகளில் இருந்தும் வெளியேற போவதாக சிட்டி வங்கி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவின் சில்லறை வர்த்தப் பிரிவில் இருந்து சிட்டி வங்கி வெளியேறியுள்ளது.
இதனிடையே, இந்தியாவை சேர்ந்த முன்னணி தனியார் வங்கியான Axis வங்கி, தனது சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக, 1.6 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அண்மையில் அறிவித்தது.
அதன்படி, தற்போது சிட்டி வங்கியின் இந்திய பிரிவை ஆக்சிஸ் வங்கி வாங்கியுள்ளது. சிட்டி வங்கியுடைய Retail, Credit Card, Small Micro Finance, Wealth Management ஆகிய பிரிவுகளை ஆக்சிஸ் வாங்கி வாங்கியுள்ளது.
Credit Card பிரிவில் 4-வது இடத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில், சுமார் 86 லட்சம் பேர் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களாக உள்ளனர். சிட்டி வங்கியின் வசம் 25 லட்சம் பேர் கிரெடிட் கார்டு பயனாளர்களாக உள்ளனர்.
Wealth Management-ஐ பொறுத்தவரை, ரூ.12 ஆயிரத்து 325 கோடி ரூபாய் ஆக்சிஸ் வங்கியின் வசம் உள்ளது. Wealth Management பிரிவில், 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் சிட்டி வங்கியிடம் இருக்கின்றன.
இந்நிலையில், சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
இந்த இணைப்புக்கு பின்னர் சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையார்ளாக மாறுவார்கள் என்றும், ஆக்சிஸ் வங்கி தரும் தொழில்நுட்ப மற்றும் பிற சேவைகள் அனைத்தும் சிட்டி வங்கி வாடிக்கயைாளர்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
சிட்டி வங்கியின் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் எனவும் ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது.