Event Management நிறுவனத்துக்கு சேவை.. – Hero MotoCorp நிறுவனம் மீது புகார்..!!
Hero MotoCorp நிறுவனம் Event Management நிறுவனத்தின் தேவைகளுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்தது வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், Hero MotoCorp நிறுவனம், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முன்ஜால் மற்றும் பலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்கள்விரிவான சோதனைகளை நடத்தினர்.
அதனை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்மையில் Hero MotoCorp நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் செலவிட்டது வணிக நோக்கத்திற்காக அல்ல, ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சேவைக்காகச் செய்யப்பட்டது என்று வருமான வரித்துறையினர் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 10 ஏக்கர் விவசாய நிலம் சில போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டதையும் வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளில், கணக்கில் வராத ரொக்கம் ரூ.60 கோடிக்கு மேல் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
நிறுவனம் சார்ட்டர்ட் விமானங்களை இயக்கிய வழக்கில், போலியாக முன்பதிவு செய்தல் மற்றும் ரூ.50 கோடிக்கு மேல் வருவாயை அங்கீகரிக்காதது. நிதி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனம் மூலம் சந்தேகத்துக்குரிய கடன்கள் போன்ற ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. மேலும், 1.35 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 3 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.