ஆகாசத்தில் விமான எரிபொருள் விலை..2% உயர்த்தப்பட்ட விலை..!!
ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை ஈட்டும் ஜெட் எரிபொருள், இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல், விமானங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருளின் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதத்தில் 1 மற்றும் 16-ம் தேதிகளில் ஜெட் எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இதுவரை இல்லாத அளவாக, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் டெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 2,258.54 அல்லது 2 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ 1,12,924.83-ஆக உள்ளது என்று அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி 1-ம் தேதி முதல் ஏழு உயர்வுகளில், எரிபொருள்களின் விலைகள் கிலோ லிட்டருக்கு ரூ. 38,902.92 அல்லது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.