Saankhya Labs பங்குகளை வாங்கும் Tejas Network.. பங்கு விலை உயர்வு..!!
சாங்க்யா லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் 64.4 சதவீத பங்குகளை வாங்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தின் அறிவிப்புக்குப் பிறகு தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்கு விலை அப்பர் சர்க்கியூட்டை நோக்கி நகர்கிறது.
டெலிகாம் ஹார்டுவேர் நிறுவனமான இது டாடா முதலீட்டில் இருந்து பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாங்க்யாவை கையகப்படுத்துவதன் மூலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட வயர்லெஸ் கம்யூனிகேஷன் மற்றும் செமிகண்டக்டர் சொல்லுயசன்ஸ் நிறுவனம், வயர்லெஸ் சலுகைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர் தளத்தையும் அதிகரிக்கும்.
Tejas Networks பங்குகள் 2021 ஆம் ஆண்டில் மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். இந்த டெலிகாம் பங்கு கடந்த 6 மாதங்களாக ஒருங்கிணைக்கும் கட்டத்தில் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதன் பங்குதாரர்களுக்கு 155 சதவீத வருவாயை வழங்க முடிந்தது.
அக்டோபர் முதல் டிசம்பர் 2021 வரையிலான தேஜாஸ் நெட்வொர்க்கின் பங்குதாரர் முறையின்படி, விஜய் கேடியா தனது நிறுவனமான கேடியா செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கெடியா செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் 39 லட்சம் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்குகளை வைத்துள்ளது, இது நிறுவனத்தின் நிகர செலுத்தப்பட்ட மூலதனத்தில் சுமார் 3.42 சதவீதமாகும்.