Digital வணிகத்தில் TATA.. TATA neu ஆன்லைன் சந்தை அறிமுகம் ..!!
இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்திலும் கால் பதிக்க உள்ளது.
ரத்தன் டாடாவால் தொடங்கப்பட்ட டாடா குழுமம் உணவில் முக்கியத் தேவையான உப்பு முதல் உலோகம், விலை உயர்ந்த கார்கள், அணிகலன்கள், விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக தடம் பதித்து இயங்கி வருகிறது.
இந்நிலையில், வருங்காலங்களின் தேவைகளை நன்றாக உணர்ந்துள்ள டாடா குழுமம் தற்போது தன்னுடைய வணிகத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன்ஒரு பகுதியாக, TATA neu என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக சந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த TATA neu App-ஐ கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த ஆன்லைன் வணிகம் ஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து தனது பயணத்தை தொடரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TATA neu App-ல் வீட்டுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் உட்பட TATA குழுமத்தின் அனைத்துவித ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளும் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள், கேஜேட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும், TATA Pay-வை பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தி கொள்ளலாம். மேலும், பயன்பாட்டு பில்களையும் இதன் மூலம் செலுத்தி கொள்ளலாம் என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் ஏசியா விமானங்களுக்காக பதிவு செய்தால், அதற்கான சில தள்ளுபடிகளும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் தாஜ் ஹோட்டல் புக்கிங்கும் செய்து கொள்ளலாம். Big Basket-ல் இருந்து மளிகை பொருட்களையும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
TATA Pay – UPI சேவை வழியாக நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது செல்ஃபோனில் உள்ள எந்த ஒரு எண்ணுக்கும், அவரது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி கொள்ளலாம். மின்சார ரயில்கள், செல்ஃபோன் கட்டணங்கள், பிராட்பேண்ட் சேவை கட்டணங்கள், ரீசார்ஜ்கள் மற்றும் டிடிஎச் என்று பலவற்றையும் செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டாடா குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் உள்ள இந்த சூப்பர் TATA neu App ரிவார்ட் பாயின்ட்களையும் தருகிறது. விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்கள் புக்கிங், மருந்து, மளிகை பொருட்கள் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்று கொள்ளலாம். இதற்காக TATA neu App, நியூ காயின் என்ற வடிவில் ரீவார்டு பாயிண்ட்டுகளையும் அளிக்கும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, டிஜிட்டல் சந்தையில் அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவைகளுக்கு போட்டியாக டாடா குழுமம் இந்த சூப்பர் TATA neu App-ஐ அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.