வரும்.. ஆனா வராது..மே மாதம் எல்ஐசி ஐபிஓ Confirm..!?
வரும் மே மாதத்தில் LICயின் பங்குகள் விற்பனையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குகளை விற்கும் LIC:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ம் தேதி, LIC IPO-வுக்கான வரைவு அறிக்கை பிப்ரவரி 14-ம் தேதி, பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது. எல்ஐசி விண்ணப்பித்த 22 நாட்களிலேயே செபி அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை தள்ளி போயுள்ளது.
விரைவில் இறுதி ஆவணம் தாக்கல்:
LIC IPO-க்கள் விற்பனை குறித்த இறுதி ஆவணங்களை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், இது தொடர்பான டிஆர்ஹெச்பி ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்து ஆர்ஹெச்பி தாக்கல் செய்யவுள்ளோம். பங்குச் சந்தையின் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தக்க நேரம் வரும்போது பங்கு விற்பனை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மே மாதம் விற்கப்படும்:
இந்நிலையில், LIC IPO-க்கள் விற்பனைகுறித்து வங்கிகள், நிதி ஆலோசகர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆர்எச்பி குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வரும் மே மாதம் எல்ஐசி பங்குகள் விற்பனையை மத்திய அரசு நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்ஐசி ஐபிஓக்கனை வெளியிடமே 12-ம் தேதி வரை மட்டுமே செபி அனுமதி அளித்துள்ளதால் அதற்குகள் பங்குகள் வெளியிடப்பட வேண்டும். எனவே, மே 12-ம் தேதிக்கு முன்பாக எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை நடைபெறும் என கூறப்படுகிறது.
மீண்டும் அனுமதி:
LIC IPO-க்கள் பட்டியலிடப்படும்போது, அவற்றின் சந்தை மதிப்பு ரிலையன்ஸ், டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்புகளை விட உயர்ந்து விடும் என்பதால், தற்போதுள்ள அவகாசத்தை பயன்படுத்தி மே 12-ம் தேதிக்குள் எல்ஐசி ஐபிஓ விற்பனையை மத்திய அரசு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படாவிட்டால், மீண்டும் செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்து, ஒப்புதல் கிடைத்த பின்பே எல்ஐசி ஐபிஓக்கள் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.