TCS நிறுவனம் அதிரடி.. கனடா, அமெரிக்காவில் திட்டங்கள்..!!
டாடா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் (TCS) அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இரண்டு திட்டங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
உலகளவில் தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறையில், இரண்டாவது மதிப்புமிக்க பிராண்டாக டாடா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் (TCS) நிறுவனம் விளங்கி வருகிறது.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பொறுத்த வரை, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் திட்டங்களை பெற்று இயங்கி வருகின்றன.
இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கனடா மற்றும் அமெரிக்காவில் தலா ஒன்று என இரண்டு திட்டங்களை கைப்பற்றி இருக்கிறது.
கனடாவை சேர்ந்த மிகப் பெரிய பேமெண்ட்ஸ் நிறுவனமாக உள்ள பேமெண்ட்ஸ் கனடா நிறுவத்தின் தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்ய, குறிப்பாக ரியல் டைர் ரெயில் என்ற சேவையை கொண்டு வருவதற்கான திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் டிசிஎஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருசில விநாடிகளிலேயே பேமெண்டை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக சரக்கு மற்றும் சேவை, பணப்பரிமாற்றம் உட்பட அனைத்திலும் சில விநாடிகளில் பரிமாற்றங்கள் சாத்தியப்படும் என்பதால், கனடா நாட்டின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் புதியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய நிறுவனமாக கிளவுட் டிரான்ஃபர்மேஷன் நிறுவன பணிகளை செய்வதற்கு பல ஆண்டுக்கான ஒப்பந்தத்திலும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கனவேவுள்ள கூட்டணியும், இந்த புதிய ஒப்பந்தம் மூலம் தொடரும் என பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலைகளும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.