ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் UBI..எதுக்கு தெரியுமா..!!
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக நடப்பு ஆண்டிலும், அடுத்து வரும் ஆண்டிலும் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக கூறினார். இதில் பெரும்பான்மையான தொகை நடப்பு நிதியாண்டிலேயே முதலீடு செய்யப்படும் எனவும் நிதேஷ் ரஞ்சன் தெரிவித்தார்.
மேலும், தற்போது வங்கியின் நிரந்தர வைப்புத்தொகை திட்ட கணக்குள் 15 சதவீதம் செல்ஃபோன்கள் மூலமாகவே நடப்பதாகவும், இது விரைவிலேயே 60 முதல் 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.