பங்குச்சந்தையில் ஏற்றம்.. – Hotel தொழிலில் முதலீடு அதிகரிப்பு..!!
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஹோட்டல் தொழிலில் அதிக அளவில் பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் தாஜ் ஜிவிகே, ஈஐஎச், லெமன் ட்ரீ போன்ற இந்தியன் ஹோட்டல்கள் பங்குகள் காட்டிய வலுவான ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஹோட்டல் தொழிலில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.
நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2022 சீசன், டெஸ்டினேஷன் திருமணம் மற்றும் கார்ப்பரேட் சந்திப்புகள் ஆகியவை ஹோட்டல் பங்குகளின் விலைகளை 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன.
ஹோட்டல் பங்குகளுக்கான அவுட்லுக் அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் நன்றாக இருப்பதாகவும், இது பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விருந்தோம்பல் பங்குகளை சரிபார்க்க காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.