நிதியுதவி அளிக்கும் KAPITUS.. – சென்னையில் அமெரிக்க அலுவலகம்..!!
அமெரிக்காவை சேர்ந்த கேப்பிடஸ் நிறுவனம் சென்னையில் தனது முதல் இந்திய அலுவலகத்தை தொடங்கியுள்ளது.
சிறிய, நடுத்தர வணிகங்களுக்கு நிதியுதவி அளிக்கும் KAPITUS நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும், இந்திய விரிவாக்கத்தின் மூலம் தனது வாடிக்ககையாளர்களுக்கு புதுமையான, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க கேப்பிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தனது முதல் இந்திய அலுவலகத்தை திறந்துள்ளது.
பெருங்குடி பகுதியில், 7 ஆயிரத்து 500 சதுர அடியில், 100 ஊழியர்களுடன் கேப்பிடஸ் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், விண்ணப்ப செயலாக்கங்கள், கடன் பகுப்பாய்வு, தரவு பகுப்பாய்வு, முன்கணிப்பு, நிதி ஆதரவு உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. இந்தப் பெருங்குடி அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப செயலாக்கம், கடன் பகுப்பாய்வு, தரவு பகுப்பாய்வு, முன் கணிப்பு மாடலிங் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை இந்திய ஊழியர்கள் குழு மூலம் வழங்குகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தங்கள் அலுவலகங்களை திறந்து வருகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளும், இங்குள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.