சீனாவுல வளர்ச்சி முடக்கம்.. இங்க மட்டும் என்ன வாழுதாம்..!!
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஒரு வருடத்திற்கு முந்தைய முதல் காலாண்டில் 4.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று திங்களன்று அரசாங்கம் அறிவித்தது.
நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.
சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் புதிய வீட்டு விற்பனை கடந்த மாதம் மதிப்பில் 29 சதவீதம் குறைந்துள்ளது.
சிமென்ட், எஃகு பொருட்கள் மற்றும் கச்சா எஃகு போன்ற முக்கிய மூலப்பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி மார்ச் மாதத்தில் “ஆச்சரியப்படும் வகையில் பரந்த அளவில் இருந்தாலும், மின் உற்பத்தியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் இரண்டாவது காலாண்டில் வருடாந்திர GDP வளர்ச்சி 4.3 சதவிகிதத்திற்கு கீழ் வரக்கூடிய அபாயங்கள் இருப்பதாகக் கூறினர்.
இதனிடையே தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் இருந்து நுகர்வோர் செலவினங்களில் அதன் மிகப்பெரிய சரிவு மற்றும் மோசமான வேலையின்மை விகிதத்தை சீனா அறிவித்தது.
சில்லறை விற்பனை 2020 க்குப் பிறகு முதல் முறையாக மார்ச் மாதத்தில் , ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 3.5 சதவீதம் சரிந்தது. வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது மே 2020 க்குப் பிறகு மிக அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டை விட மார்ச் மாதத்தில் உணவகங்களில் செலவினம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.