ஒன்னா சேருதுங்க L&T IT, Business.. அடுத்த வாரம் பங்கு அறிவிப்பு..!!
பன்னாட்டு நிறுவனமான Larsen & Toubro (L&T) அதன் IT சேவை வணிக பிரிவுகளான L&T Infotech (LTI) மற்றும் Mindtree ஆகியவற்றை ஒன்றிணைக்க தயாராக உள்ளது.
இணைப்பு அறிவிப்பு அடுத்த வார தொடக்கத்தில், பங்கு-மாற்று விகிதங்களின் விவரங்களுடன் அறிவிக்கப்படலாம். இருப்பினும், மிட்-கேப் IT சேவை நிறுவனமான Mindtree ஊகங்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறியது.
சந்தையில் மைண்ட்ட்ரீ பங்கு 3.33 சதவீதம் குறைந்து ஒரு பங்கின் விலை ரூ.3,960.8 ஆக இருந்தது; LTI பங்கு ஒரு பங்கிற்கு ரூ. 5,866; ஒரு பங்கிற்கு ரூ.5,866 என்ற விலையில் இருந்த LTI பங்கு வர்த்தக நாளின் முடிவில் 2.66 சதவீதம் குறைந்துள்ளது.