பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!
இந்தியாவின் பொது அரசு நிதிப் பற்றாக்குறை GDP யில் 9.9 விழுக்காடு என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் உரங்களின் விலை சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொற்றுநோயிலிருந்து போர் வரை என்ற தலைப்பில் அறிக்கை கூறுகிறது. அதிக அளவு நிச்சயமற்ற தன்மை பொருளாதாரத்தை வேறுவிதமாக பாதிக்கும். இது அவர்களின் வளர்ச்சி மற்றும் பொது நிதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது.
அதிகரித்து வரும் பணவீக்கம், வளர்ச்சியில் மந்தநிலை, அதிக கடன் மற்றும் இறுக்கமான கடன் நிலைமைகள் ஆகியவற்றின் பின்னணியில் உலகளாவிய அரசாங்கங்கள் தங்கள் பதில்களை வடிவமைக்க வேண்டும் என்று அண்மையில் வெளியான IMF அதன் நிதி கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.