Federal Reserv கொள்கை முடிவுகள்.. – முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!!
2021 அக்டோபரில் இருந்து முன்னணி குறியீடுகள் ஒவ்வொன்றும் சுமார் 5 சதவீதம் சரிந்தன.
உலகளாவிய மத்திய வங்கிகள், குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் , கொள்கை முடிவுகள் முதலீட்டாளர்களை வெளியேற்றியது.
கடந்த வெள்ளியன்று ஆசிய சந்தைகள் முழுவதும் பங்கின் விலை இறங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
மே மாதத்தில் 50 பிபிஎஸ் விகித உயர்வு சாத்தியம் என்றும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் என்றும் மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்த கருத்து, 10 ஆண்டு கால கடன் பத்திரங்களை 2.9 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியுள்ளது.
இந்தப் பின்னணியில், உலகளாவிய குறிப்புகள், பத்திர ஈவு மற்றும் மேக்ரோ பொருளாதார முன்னேற்றங்கள் ஆகியவை இந்த வாரம் சந்தைகளுக்கு வழிகாட்டும்.
இன்று வர்த்தகத்தில் தனியார் கடன் வழங்குநரான ICICI வங்கியின் Q4 முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தின் பிற்பகுதியில், பஜாஜ் ட்வின்ஸ், HDFC லைஃப், பஜாஜ் ஆட்டோ, HUL, Axis Bank, Maruti Suzuki, Ultratech Cement மற்றும் Wipro உள்ளிட்ட 9 நிஃப்டி நிறுவனங்கள் தங்கள் Q4 வெளியிடும் என தெரிகிறது.