5-ம் இடத்துக்கு முந்திய Gautam Adani.. 6-வது இடத்துக்கு சென்ற Buffet..!!
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5-ம் இடத்தில் இருந்த வாரன் பஃபெட் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமங்கள் மற்றும் அதானி அறக்கட்டளை நிறுவன தலைவராக Gautam Adani உள்ளார். துறைமுகம், வேளாண்மை, எரிபொருள், மின்னுற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
Forbes Real Time Billionaire வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 280 கோடி டாலராக உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், Berkshire Hathaway நிறுனத் தலைவரும், செயல் அதிகாரியுமான Warren Edwrad Buffet-ன் சொத்து மதிப்பு12 ஆயிரத்து 170 கோடியாக உள்ளது.
இதையடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி வாரன் பஃப்பெட்டை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். Warren Edwrad Buffet-ன் Berkshire Hathaway நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவை சந்தித்துள்ளது இதற்கு காரணமாக தெரிகிறது.
அதேசமயம், கௌதம் அதானியின் போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் துணை நிறுவனமாக உள்ள அதானி ஹார்பர் சர்வீசஸ் நிறுவனம், துறைமுகம் தொடர்பான சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள ஓஷியன்ஸ் பார்க்கிள் லிமிடெட்டின் நிறுவனத்தை கையப்படுத்தப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தன மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய போவதாகவும், உலகத் தரம் வாய்ந்த துறைமுக கட்டமைப்பை உருவாக்க, டேட்டா மையம் அமைப்பது, மற்றும் கடலுக்கடியில் கண்ணாடியிழை கேபிள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது. இந்த காரணங்களால் அதன் பங்குச் சந்தை மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்காரர்கள் பட்டியலில், Bill Gates, Bernard Arnault, Jeff Bezos மற்றும் Elon Musk ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.