Abu Dhabi-யில் Ambani..2 பில்லியன் டாலர் முதலீடு..!!
Reliance Industries நிறுவனர் Mukesh Ambani, Abu Dhabi-யில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமாக உள்ள Reliance Industries தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக பல்வேறு முதலீடுகளை செய்து வருகிறது.
அதன்ஒரு பகுதியாக, Abu Dhabi Chemicals Derivatives Company(RSC) TA’ZIZ என்ற நிறுவனத்துடன் 2 பில்லியன் டாலர் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் RIL கையெழுத்திட்டுள்ளது.
TA’ZIZ Industrial Chemical நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக, Abu Dhabi National Oil Company(ADNOC) மற்றும் ADQ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் முதலீடு செய்யவுள்ளது.
அபுதாபியில் இருக்கும் Al Ruwais Chemical Zone பகுதியில் இதற்கான புதிய ஆலை அமைய உள்ளதாகவும், இது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில், Chlor Alkali, Ethylene Dichcloride – EDC, Polyvinyl Chloride – PVC உள்ளிட்டவற்கை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். இவை, முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் புதிய உற்பத்தியாளர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முகேஷ் அம்பானி, இந்த முயற்சியானது இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வளர்ந்து வரும் வணிக உறவுக்கு நல்ல சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று(26.04.2022-செவ்வாய்) ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை தேசிய பங்குச் சந்தையில் 2.99 சதவீதம் அதிகரித்து 2775.65 ரூபாயாக முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் இதன் விலை 3 சதவீதம் உயர்ந்து 2775.70 ரூபாயாக வர்த்தகமானது.