வேலைவாய்ப்பு ஒப்பந்த சர்ச்சை புகார்.. Infosys-க்கு தொழிலாளர் ஆணையம் நோட்டீஸ்..!!
Infosys நிறுவனத்திற்கு இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிறுவனத்தின் வேலை ஒப்பந்தங்கள், தொழிலாளர் சங்கம் கூறும் ஒப்பந்தத்தில் ஊழியர்களை கையெழுத்திட வைத்ததாக இன்ஃபோசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது மற்றும் பாரபட்சமானது.
ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஆறு மாதங்கள் வரை அக்சென்ச்சர், டிசிஎஸ், ஐபிஎம், விப்ரோ மற்றும் காக்ஜின்சன்ட் ஆகிய போட்டி நிறுவனங்களில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற Infosys விதியை ஏற்குமாறு ஊழியர்களை கேட்டுக் கொண்டது.
முந்தைய 12 மாதங்களில் இன்ஃபோசிஸில் இருந்தபோது அவர்கள் சேவை செய்த அதே வாடிக்கையாளர்களுக்காக வேலை செய்வதையும் இது தடை செய்கிறது. இந்த உட்பிரிவுகள் ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 27ஐ மீறுவதாகவும், சட்டவிரோதமானவை என்றும் NITES கூறுகிறது.