பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் – இந்திய அரசு பரிசீலனை
பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் நிறுவனத்தில் கால் பகுதியை விற்க இந்தியா பரிசீலித்து வருகிறது.
அரசாங்கத்தின் பங்கு விலக்கல் திட்டம் எதிர்பார்த்ததை விட மெதுவாக நகர்கின்றன என்றும், BPCL ன் மொத்த 52.98% பங்குகளை முழுமையாக விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதன் 20%-25% பங்குகளுக்கான ஏலங்களை அழைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், ஆரம்பத்தில், அரசாங்கம் BPCL இல் அதன் முழுப் பங்குகளையும் விற்பதன் மூலம் $8-$10 பில்லியன் திரட்ட இலக்கு வைத்திருந்தது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்..
பிபிசிஎல்-ன் ஒரு பகுதி விற்பனை கூட இந்த நிதியாண்டில் நிறைவடைய வாய்ப்பில்லை, ஏனெனில் செயல்முறை 12 மாதங்களுக்கு மேல் எடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உள்ள சீரற்ற கொள்கைகளால் விற்பனை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களில் ஒருவர் கூறினார்.
தனியார் சமபங்கு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை இறுதி ஏலதாரர்களாக இருந்தன.
BPCL இன் முழு பங்கு விற்பனையில் பின்வாங்குவது அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களில் மெதுவான முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.
2020 ஆம் ஆண்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள், சுரங்க நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டாளர்கள் உட்பட பெரும்பாலான அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டங்களை அறிவித்தார்.
ஆனால் சிறிதளவு முன்னேற்றம் இல்லை, மேலும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான ஐடிபிஐ வங்கியைத் தவிர வேறு எந்த வங்கிகளையும் இந்த நிதியாண்டில் விற்கும் திட்டத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாக இரு அதிகாரிகளும் தெரிவித்தனர்.