Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ ஜூலை தொடக்கத்தில் வரலாம்
வாடியா குழுமத்திற்கு சொந்தமான Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ, ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வரலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு தனது ஐபிஓவிற்கு செபியிடம் இருந்து அனுமதி பெற்ற ஏர்லைன்ஸ், ஓமிக்ரான் காரணமாக ஐபிஓவை நிறுத்தி வைத்தது. பின்னர் எல்ஐசியின் மெகா ஐபிஓவு காரணமாக தனது ஐபிஓவைத் தள்ளி வைத்தது.
அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP) படி, பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.3,600 கோடி வரை திரட்ட ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு பயணிகள் கணிசமாக உயர்வதன் காரணமாக நிறுவனத்தின் வங்கியாளர்கள் ஐபிஓவை ஊக்குவித்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிக எரிபொருள் விலைகள் மற்றும் டாலருக்கு எதிராக பலவீனமான ரூபாய் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இது ஒரு விமான நிறுவனத்தின் ஐபிஓவின் மதிப்பீட்டைத் தாக்கும்.
மார்ச் 2023 இறுதிக்குள் 10 புதிய ஏர்பஸ் ஏ320 நியோக்களை சேர்க்க விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது