ஐடிசி நிறுவனம் ஒருங்கிணைந்த லாபம் 11.60 சதவீதம் அதிகரித்தது
ஐடிசி நிறுவனம் மார்ச் காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 11.60 சதவீதம் அதிகரித்து, ரூ.4,259.68 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில், ரூ.3,816.84 கோடியாக இருந்தது.
சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகமானது, முக்கிய விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள போதிலும், செலவு மேலாண்மை மூலம் சிறப்பாகச் செயல்பட்டதாக நிறுவனம் கூறியது.
கூடுதலாக, கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது, கல்வி மற்றும் எழுதுபொருள் தயாரிப்பு வணிகத்தை மீட்டெடுக்க உதவியது,
இந்த ஆண்டில், நிறுவனம் சுமார் 110 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது; கடந்த ஆண்டு இது 120 ஆக இருந்தது.
வேளாண் வணிகத்தின் வருவாய் ஆண்டுக்கு ரூ.3,383 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.4,375.42 கோடியாக இருந்தது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.185.11 கோடியிலிருந்து ரூ.244.31 கோடியாக இருந்தது.
302.35 கோடியுடன் ஒப்பிடும்போது ஹோட்டல் பிரிவில் இருந்து ரூ.407.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வரிக்கு முந்தைய இழப்பு ரூ.40.26 கோடியிலிருந்து ரூ.29.08 கோடியாகக் குறைந்தது.
பேப்பர்போர்டு பிரிவு ரூ.1,655.91 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.2,182.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.323.25 கோடியிலிருந்து ரூ.449.69 கோடியாக இருந்தது.