உலகளவில் வைர சந்தைகள் மீண்டு வருவதால், விரைவான வளர்ச்சி வருவதாக ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்’ தெரிவித்துள்ளது !!!
உலகளவில் வைர சந்தைகள் மீண்டு வருவதால், விரைவான வளர்ச்சியைக் கண்டு வருவதாக ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்’ தெரிவித்துள்ளது. ஒரு நேர்காணலில், ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின்’ தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி, சந்தையில் வைரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது என்று கூறினார்.
மேலும் முதல் லாக்டௌன் நீக்கப்பட்ட பிறகு, வைர நகைகளுக்கான நுகர்வோர் தேவை நன்றாக இருந்தது என்றும் இதன் வளர்ச்சி அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டியது என்றும் அவர் தெரிவித்தார்.
பெயின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், வைர நகைகள் விற்பனை 14% குறைந்துள்ளது மற்றும் வைர விற்பனை 31% குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், வைரச் சுரங்கப் பிரிவில் வருவாய் 62%, கட்டிங் மற்றும் பாலிஷ் செய்வதற்கு 55% மற்றும் வைர நகை சில்லறை விற்பனையில் 29% அதிகரித்தது என்று கூறியுள்ளது.
அத்துடன் இந்தியாவிற்கான மேக்ரோ தரவுகள் எங்களிடம் இல்லை, ஆனால், லாக்டவுன்கள் நீக்கப்பட்டவுடன், தேவை மிகவும் வலுவாக இருந்ததாகக் கூறுகிறது. 2020 ஆம் ஆண்டில் 25% சரிவைத் தொடர்ந்து, இந்தியாவில் வைர நகை விற்பனை 2021 இல் 16% உயர்ந்துள்ளது என்றும் அதே அறிக்கை மேலும் கூறியுள்ளது.
உலகின் வைர நகை சந்தையில் சுமார் 50% அமெரிக்காவிடம் உள்ளது. இரண்டாவது பெரிய சந்தை சீனா, இது 16-17%. மூன்றாவது இந்தியா, சந்தையில் 5 லிருந்து 6 சதவீதம். சீனாவின் லாக்டௌன் சில்லறை விற்பனையை பாதிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தங்கம் ஒரு சேமிப்பாகப் பார்க்கப்படுகிறது.ஆனால், இப்போது, அதே நுகர்வோர் தங்கத்தை முதலீடாகவும், வைரங்களை விரும்பத்தக்கதாக இருப்பதால் வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.
செயற்கை வைரங்கள் உலகில் ஒரு இடத்தைப் பெறும். இது சிறந்ததாகவும் மலிவானதாகவும் இருக்கும். மேலும், இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தியாளர்களின் வளர்ச்சியுடன் நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம் என்றும் தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.