’பசுமை ஹைட்ரஜன்’ 4 இலட்சம் கோடியை முதலீடு செய்ய அதானி திட்டம்
உலகின் மிகப் பெரிய ’பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அமைக்க சுமார் 4 இலட்சம் கோடியை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மாற்று எரிபொருள் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய பிரான்சின் TotalEnergies SE மற்றும் அதானி குழுமம் ஆகியவை இணைந்து இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் $50 பில்லியன் முதலீடு செய்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும் அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன.
இத்திட்டத்திற்காக அடுத்த பத்து ஆண்டுகளில் 3.90 இலட்சம் கோடி ரூபாவை (50 பில்லியன் டாலரை) முதலீடு செய்வதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது-
ஆரம்ப கட்டத்தில், அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை 2030 க்குள் ஆண்டுக்கு 1 மில்லியன் டன்னாக உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரில் மின்விளைவுகளை உண்டாக்கி ஹைட்ரஜனையும், ஆக்ஸிஜனையும் தனித்தனியாக பிரித்து எடுப்பதுதான் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பம் எனப்படுகிறது.