ரஷ்யாவுக்கே இந்த நிலையா?
ரஷ்யா உக்ரேன் போர் காரணமாக, சர்வதேச நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் விளைவாக, சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான வட்டியை ரஷ்யா செலுத்த தவறி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் சீர்குலைவு தான் இந்த நிலைக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
கடந்த வாரம் ரஷ்யா, 40 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலுவையில் உள்ள கடனை ரூபிள்களில் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் வெளிநாட்டு கடனாளிகள் அதனை ஏற்க மறுத்தன.
தொடர்ந்து, மார்ச் தொடக்கத்தில் இருந்து யூரோ பாண்டுகள் வர்த்தகம் குறைந்தது. அதேபோல், மத்திய வங்கியின் வெளிநாட்டு இருப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் உக்ரேன் ரஷ்யா போர் காரணமாக, ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகள், உலக அளவிலான நிதி அமைப்புகளில் இருந்து தனித்து நிறுத்தப்பட்டு உள்ளன.
1998 ம் ஆண்டு ஏற்பட்ட ரஷ்யாவின் நிதி நெருக்கடி மற்றும் ரூபிள் சரிவின் போது, ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் அரசாங்கம் அதன் உள்ளூர் கடனில் $40 பில்லியன் செலுத்தத் தவறியது. அதற்கு முன்னர், விளாடிமிர் லெனினின் கீழ் போல்ஷிவிக்குகள் 1918 ஆம் ஆண்டில் ஜார்களின் கடன் சுமையை நிராகரித்த போது, இதே போன்ற ஒரு நிலையை ரஷ்யா சந்தித்தது.