ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் காலமானார்
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான பல்லோன்ஜி மிஸ்திரி மும்பையில் காலமானார். வயோதிகத்தின் காரணமாக இறந்த அவருக்கு வயது 93.
ஷபூர்ஜி உருவாக்கிய Shapoorji Pallonji குழுமம் பொறியியல் மற்றும் கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், நீர், எரிசக்தி மற்றும் நிதி சேவைகளில் முன்னிலையில் உள்ளது. 50 நாடுகளில் 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட குழு, ஆரம்பம் முதல் இறுதி வரை தீர்வுகளை வழங்குகிறது.
இவரது உழைப்பில் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல் கட்டிடங்கள் என்பன போன்ற மும்பையின் சில அடையாளங்களை உருவாக்கியுள்ளது. 1971 இல் ஓமன் அரண்மனை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை ஷபூர்ஜி குழுமம் வென்றது போன்ற குறிப்பிடத்தக்க முத்திரையை தனது வணிகத்தில் பதித்துள்ளது.
அவருக்கு மூத்த மகன் ஷாபூர், இளைய மகன் சைரஸ் மிஸ்திரி என் இரண்டு மகன்களும், லைலா மற்றும் ஆலூ என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்களின் ஆலூ, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவை மணந்தார்.