டாடா வாகனம் வாங்க போகிறீர்களா? கவனிக்கவும்
டாடா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தபோவதாக அறிவித்துள்ளது. இதன்படி டாடா நிறுவனம் விற்பனை செய்யும் வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலை ஜூலை 1ம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த விலை உயர்வானது, வாகனத்தை பொறுத்து 1.5 சதவிதம் முதல் 2.5 சதவிதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு வாகனத்தின் விலை 10 லட்சம் ரூபாய் என்றால், அதன் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி செலவுகள் அதிகரித்து உள்ளதால், டாடா நிறுவனம் அண்மையில், அதாவது ஏப்ரல் மாதம் முதல், தனது கார்கள் உட்பட அனைத்து வாகனங்களின் விலையையும் 1.1 சதவிதம் அதிகரித்த நிலையில், தற்போது வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலையையும் அதிகரித்துள்ளது.