88 வயது ஒரு தடையில்லை. தொழில்முனைவோரான நாகமணி பாட்டி
நீங்கள் முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், இதை தீர்க்க கர்நாடகத்தைச் சேர்ந்த 88 வயதான நாகமணி உதவுவார்.
சிறுவயதில் இருந்தே தனது கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெயை உபயோகித்து வரும் மணி, நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஹேர் ஆயில் ஃபார்முலாவை கூறிவந்தார்.
பயனடைந்தவர்கள் பாராட்டவே, அவர் தனது 60 களின் பிற்பகுதியில் எண்ணெயை ஒரு வணிகமாக மாற்ற முடிவு செய்தார். ஆரம்பத்தில் தனது அருகில் உள்ள சலூன் கடைகளில் அதை விற்பனை செய்தார். பின்னர் கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் கடை போட்டார். விற்பனை சூடு பிடித்தது.
இதில் தேங்காய் எண்ணெய் தவிர, நான்கு எண்ணெய் விதைகள் உள்ளன. “அவர்களில் ஒன்று மேதி. இரண்டு விதைகள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் அரிதானவை. அருகிலுள்ள ஒரு விற்பனையாளரின் உதவியுடன் நாங்கள் அதை ஹிமாச்சலப் பிரதேசத்திலிருந்து பெறுகிறோம்,” என்று நாகமணியின் மகள் அச்சலா கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், விதைகள் கையால் துடைக்கப்பட்டு, பின்னர் அவை தேங்காய் எண்ணெயில் சேர்க்கப்பட்டு, குறைந்தது ஆறு வாரங்கள் வெயிலில் வைக்கப்படும். பொருட்கள் மற்றும் எண்ணெயை நாம் அரைக்கவோ அல்லது சூடாக்கவோ மாட்டோம். இந்த செயல்முறை வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 60-70 லிட்டர் எண்ணெய் விற்கிறது. 300 மில்லி எண்ணெய் கொண்ட ஒரு பாட்டிலின் விலை ₹600 வரை விற்கப்படுகிறது. இதை நாங்கள் பெரிய அளவில் செய்யலாம். ஆனால் அது தரத்தில் பல சமரசங்களுக்கு வழிவகுக்கும், அதை நாங்கள் விரும்புவதில்லை” என்றார் அச்சலா.
“வரவிருக்கும் தலைமுறையினருடன் செய்முறையைப் பகிர்வதே இப்போது முக்கிய நோக்கமாக உள்ளது. மதிப்பைப் புரிந்துகொண்டு தரத்தைப் பராமரிக்கும் சரியான குழுவுடன் ஒத்துழைப்பதன் மூலம் நாங்கள் அதைச் செய்ய விரும்புகிறோம்.” என்று ஒருமித்த குரலில் கூறுகிறார்கள் இவர்கள்.