இன்று பங்குச்சந்தைகள் நிலை என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை அதிகரித்து இருந்த நிலையில், மாலையில், சந்தை முடியும் நேரத்தில் 8 புள்ளிகள் மட்டும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிவுடன்53 ஆயிரத்து 19 புள்ளிகள் என்ற நிலையில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 780 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
ஜூன் மாத எக்ஸ்பெயரி சரிவுடன் நிறைவடைந்த நிலையில், அது பங்குகளில் எதிரொலித்துள்ளது. காலையில் பங்குச்சந்தை உயர்வுடன் இருந்த நிலையில், சர்வதேச அளவில் அசாதாரண பொருளாதார சூழல் காரணமாக, மாலையில் பங்குச்சந்தை சரிவை கண்டது. சர்வதேச பொருளாதார காரணங்கள் என்று பார்க்கும் போது, வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற அச்சம் சற்று மேலோங்கி இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. நிப்டி, தற்போதைய நிலையில் இருந்து 15 ஆயிரத்து 365 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தால், சந்தை மேலும் சரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்