HDFC வங்கிக் கிளையில் கணினி குளறுபடி
சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள HDFC வங்கிக் கிளையில் கணினி மேம்பாட்டின் போது ஏற்பட்ட குளறுபடிகளால் வங்கியில் உள்ள 4,468 வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மீட்க முயற்சிக்கிறது என்று வங்கி வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.
நிதியை மீட்டெடுக்க வங்கி சட்ட நடவடிக்கைகளை நாட வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு சில வாடிக்கையாளர்கள் தலா ரூ.13 கோடியைப் பெற்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, மே மாதத்தில் 100 வங்கிக் கணக்குகளை வங்கி தற்காலிகமாக முடக்கியது.
சில டிஜிட்டல் சலுகைகள் மீதான ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து முழு அமைப்பையும் மாற்றியமைக்க முன்னர் வங்கி முடிவு செய்திருந்தது.
எச்டிஎஃப்சி வங்கி அதன் டிஜிட்டல் தளங்களில் மீண்டும் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டுப்பாடுகளை நீக்கியது.