இன்றைய (05 July, 2022) பங்குச்சந்தை நிலவரங்கள்
இன்று காலை இந்திய பங்குச்சந்தைகள் 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகம் ஆன நிலையில், வர்த்தகத்தின் இறுதியில், சரிவுடன் பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. இன்று காலை, ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்திக்க தொடங்கின. இதற்கு எதிர்வர கூடிய நிறுவனங்களின் முடிவுகள் குறித்த அச்சம் ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 37 காசுகள் என்ற அளவிற்கு சரிந்ததும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 53 ஆயிரத்து 134 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 25 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 810 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.