“ஒப்பந்தம் ரத்து” – எலோன் மஸ்க்
ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் பற்றிய விவரங்களை தர, நிறுவனம் தவறிவிட்டது என்று கூறி ட்விட்டர் inc நிறுவனத்திற்கான தனது $44 பில்லியன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலோன் மஸ்க் கூறினார்.
யுஎஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு (SEC) தாக்கல் செய்த மனு ஒன்றில் மஸ்க்கின் வழக்கறிஞர்கள், ட்விட்டர் தளத்தில் உள்ள போலி அல்லது ஸ்பேம் கணக்குகள் பற்றிய தகவல்களுக்கான பல கோரிக்கைகளுக்கு பதிலளிக்க ட்விட்டர் தவறிவிட்டது அல்லது மறுத்துவிட்டதாகக் கூறினர்.
ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர் கூறுகையில், இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது என்றார்.
ஒப்பந்த விதிமுறைகளின்படி பரிவர்த்தனையை முடிக்கவில்லை என்றால், மஸ்க் 1 பில்லியன் டாலர் பிரேக்-அப் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கடந்த மாதம் கத்தார் பொருளாதார மன்றத்தில் மஸ்க் பேசும்போது, ட்விட்டரின் தளத்தில் போலி பயனர்களின் எண்ணிக்கை குறித்த “மிக முக்கியமான” கேள்விகளால் தனது ட்விட்டர் வாங்குதல் நிறுத்தப்பட்டதாக கூறினார்.