வரவிருக்கும் அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம்
சென்னை, நவி மும்பை, நொய்டா, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் டேட்டா சென்டர்களை உருவாக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அலைக்கற்றை ஏலத்தில் வெள்ளிக்கிழமை ஆர்வம் காட்டிய நான்கு நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்று என நம்பப்படுகிறது.
வரவிருக்கும் ஏலத்தில் அதிவேக இணைய இணைப்புக்குத் தேவையான 5G பேண்ட் அடங்கும். அதனால் அதானி குழுமம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
ஜூலை 12 ஆம் தேதிக்குள் உரிமையாளர் விவரங்களையும் பின்னர் ஏலதாரர்-உரிமை இணக்கச் சான்றிதழையும் இந் நிறுவனங்கள் வழங்க வேண்டும். ஜூலை 19 ஆம் தேதிக்குள் ஏல விண்ணப்பங்களை திரும்பப் பெறும் நாள் என்றும் ஜூலை 27ம் தேதி ஏலம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதானியின் தொலைத் தொடர்பு நிறுவனம், சென்னை, நவி மும்பை, நொய்டா, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்கி இயக்க 50-50 கூட்டு முயற்சியில் சர்வதேச நிறுவனமான EdgeConnex உடன் இணைந்துள்ளது.
அதானியின் தரவு வணிகமானது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிடும்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், சுனில் மிட்டல் கட்டுப்பாட்டில் உள்ள பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா லிமிடெட் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தும் இத்துறையில் அதானியின் வரவு தொலைத்தொடர்புத்துறையின் அதன் இருப்பை விரிவுபடுத்து