உரிம நிபந்தனைகளில் ‘விரிவாக்கம்’ – தொலைத்தொடர்புத் துறை
உரிம நிபந்தனைகளை, தொலைத்தொடர்புத் துறை (DoT) மேலும் கடுமையாக்கியுள்ளது.
ஆபரேட்டர்கள் “நம்பகமான ஆதாரங்களின்” ஒப்புதலுடன் விற்பனையாளர்களிடமிருந்து உபகரணங்களை நெட்வொர்க் மேம்படுத்தல் மட்டுமின்றி விரிவாக்கத்திற்கும் பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தியுள்ளது. உரிம நிபந்தனைகளில் ‘விரிவாக்கம்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ”நெட்வொர்க்கின் விரிவாக்கம்” என்ற போர்வையில் இரண்டு சீன விற்பனையாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதாக அரசாங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இது உரிம நிபந்தனைகளின் கீழ் இல்லை.
சமீபத்திய மாற்றங்கள் நடப்பு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களை (AMC) பாதிக்காது என்று அரசாங்கம் கூறியது.