தங்கம், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி விலை குறைப்பு
மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் கச்சா சமையல் எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை குறைப்பதாக அறிவித்தது.
நிதி அமைச்சகம் ஜூலை 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலை 10 கிராமுக்கு 37 டாலரும், வெள்ளியின் விலை ஒவ்வொரு கிலோவுக்கு 3 டாலரும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த குறைப்பால், தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலை $585/10gலிருந்து $548/10g ஆகக் குறைகிறது. மற்ற தங்கக் கட்டிகளின் இறக்குமதிக்கு புதிய விலை பொருந்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளியின் ஒரு கிலோகிராமின் இறக்குமதி விலை தற்போது 614 டாலரில் இருந்து 611 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. பதக்கங்கள், வெள்ளி நாணயங்களைத் தவிர 99.9 சதவீதத்திற்குக் குறையாத வெள்ளிக்கும் பொருந்தும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கச்சா பாமாயிலின் டன்னுக்கு 1,401 டாலரில் இருந்து 1,171 டாலராகக் குறைத்துள்ளது. கச்சா பாமோலினின் அடிப்படை இறக்குமதி விலை $1,545/tnலிருந்து $1,358/tn ஆக குறைக்கப்பட்டுள்ளது