“சந்தேகத்திற்குரிய” சரக்கு – கண்காணிக்கும் சுங்க அதிகாரிகள்!
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) புதிய ’கட்டுப்படுத்தப்பட்ட விநியோக ஒழுங்குமுறை’யை அறிவித்துள்ளது.
இந்த ஒழுங்குமுறையால் “சந்தேகத்திற்குரிய” சரக்குகளின் நகர்வைக் கண்காணிக்க, கண்காணிப்பு சாதனங்களை நிறுவ சுங்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.
தங்கக் கடத்தலை தடுக்க இந்த நடவடிக்கை ஒரு முன்னோடி நடவடிக்கை என்று வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறக்குமதி வரி அதிகரிப்பால் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் சுங்கத்துறை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.