பங்குகளை விற்று வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை ரூ.7,400 கோடிக்கு மேல் பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் அவர்கள் தங்கள் பங்குகளை விற்று நிகரமாக ரூ.50,203 கோடியை திரும்பப் பெற்றனர்.
கடந்த ஒன்பது மாதங்களாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிதிகள் வெளியேறி வருகின்றன. டெபாசிட்டரிகளின் தரவுகளின்படி, ஜூலை 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் இந்திய பங்குகளில் இருந்து FPIகள் ரூ.7,432 கோடி நிகரத் தொகையை எடுத்துள்ளன.
சமீபத்திய வெளியேற்றத்துடன், இந்த ஆண்டு இதுவரை பங்குகளில் இருந்து FPIகளின் நிகர வெளியேற்றம் சுமார் ரூ. 2.25 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஒரு சாதனை உயர்வாகும். இதற்கு முன், 2008ம் ஆண்டு முழுவதும் ரூ.52,987 கோடி திரும்பப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈக்விட்டிகள் தவிர, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில் FPIகள் கடன் சந்தையில் இருந்து 879 கோடி ரூபாய் நிகரத் தொகையை திரும்பப் பெற்றன.