ஷாக்கடிக்கும் மின்கட்டண உயர்வு
மின்சார வாகனங்களை மக்கள் தற்போது அதிகம் வாங்க தொடங்கி இருக்க கூடிய நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால், மின் கட்டணம் உயர தொடங்கி உள்ளது. இதன் படி, தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை, வாரியத்தின் கடன் சுமை படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் திட்டமான உதய் திட்டத்தில் சேர்ந்ததால் அவர்கள் தரும் அழுத்தத்தாலும் மின் கட்டணத்தை உயரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் காரணமாக, சாமானிய மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், மாநிலங்களின் மீது அழுத்தும் கொடுத்து மின் கட்டணத்தை உயர்த்த வைப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.